திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (14:36 IST)

’தேவர் மகன்’ தமிழ் சினிமாவின் சிறந்த படம்.. மாரி செல்வராஜுக்கு இயக்குனர் மோகன் ஜி பதிலடி..!

mohan g
தேவர் மகன் படம் குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில் அவருக்கு கமல் ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படம் தேவர் மகன் என இயக்குனர் மோகன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து மாரி செல்வராஜிற்கு பதிலடியாக கூறியுள்ளார் 
 
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் என்ற திரைப்படம் வரும் வெள்ளி என்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தேவர் மகன் படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பதிவை பெட்டிஷன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். 
 
இரண்டு படம் இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு தேவர் மகன் பற்றி என்ன தெரியும் என்றும்   கமல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் இயக்குனர் மோகன் ’தேவர் மகன் படம் குறித்து கூறியதாவது: தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று.. 30 வருடங்கள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்த திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம் #தேவர்மகன்
 
Edited by Mahendran