1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (07:51 IST)

கேப்டன் மில்லர்… சிவராஜ் குமார் காட்சிகள் முடிவு- நன்றி தெரிவித்த இயக்குனர்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது.

இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக ஷூட்டிங்கில் கலந்துகொண்ட அவரின் காட்சிகளை இப்போது படமாக்கி முடித்துள்ளனர் படக்குழுவினர். இதையடுத்து அவரோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், உறியடி விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படம் டிசம்பர் இறுதியில் கிறிஸ்துமஸ் நாளில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.