திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (15:38 IST)

மோடிக்கு மறுக்கப்பட்ட அழைப்பு... ஆனால் இவர்களுக்கு மட்டும்: இம்ரான் கான்!

கடந்த 25 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்தது.  
117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி உள்ளது. 
 
இந்நிலையில், இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமாக வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இவரது பதவியேற்பு விழாவிற்கு, சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, அமீர்கான்  ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
பதவியேற்பு விழாவிற்கு மோடி அழைக்கப்படுவார் என செய்திகள் வெளியான நிலையில், மோடிக்கு அழைப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வெளிநாட்டு தலைவர்கள் வருகைக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
 
ஆனால், வெளிநாடுகளை சேர்ந்த சில நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.