இம்ரான்கான் பதவியேற்பு விழா: மோடிக்கு ஸ்பெஷல் அழைப்பு?

Last Updated: சனி, 28 ஜூலை 2018 (14:52 IST)
கடந்த 25 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 342 இடங்களில் 272 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். பாகிஸ்தானில் 270 தொகுதிகள் உள்ள நிலையில் 136 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும். 
அந்த வகையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்துள்ளது. 
 
முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் முஸ்லிம் லீக் கட்சிக்கு 64 இடங்களிலும், பிலாவல்பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 43 இடங்களிலும் கிடைத்துள்ளது. மீதமுள்ள 67 தொகுதிகளை இதர சிறிய கட்சிகளும், சுயேட்சைகளும் கைப்பற்றின. 
 
117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி உள்ளது என தகவல் தெரிவிக்கின்றன. 
 
மேலும், இம்ரான்கான் தனது பதியேற்பு விழாவிற்கு தயாராகி வருகிறாராம். அதோடு, இவரது பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மோடிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாம். 
 
ஏற்கனவே இம்ரான்கான் இந்தியாவோடு சுமூக உறவில் பயணிக்க  விரும்புகிறேன் எனவும் பிரச்சாரத்தின் போது மோடி போல் ஆட்சி அளிப்பேன் என கூறியதும் குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :