வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2023 (17:03 IST)

ஆஸ்திரேலிய அமைச்சருக்கு ரோஹித் சர்மா கையெழுத்திட்ட பேட் பரிசளித்த அமைச்சர் ஜெய்சங்கர்

jai shanar - penny wonk
ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்த நாட்டின் அமைச்சருக்கு இந்திய கேப்டன் பேட்டை பரிசளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டில் பிரதமர் ஆண்டனி ஆல்பனஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

தற்போது, ஆஸ்திரேலியா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய செயல்திட்ட கொள்கை மையம் மற்றும் இந்தியாவின் ஓ.ஆர்.எப் சார்பில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இந்த பேச்சு வார்த்தையின்போது, இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான நல்லுறவு பற்றியும், , இந்தோ- பசிபிக் வளங்களுக்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பு பற்றியும் விவாதிக்க உள்ளனர்.

ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வாங்கை நேரில் சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கையெழுத்திட்ட பேட் மற்றும் இந்திய அணியின் ஜெர்சி அவருக்கு பரிசளித்தார்.