செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (16:23 IST)

இந்துக்கள் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள்: அமைச்சரின் பேச்சால் கடும் சர்ச்சை

இந்தியாவில் உள்ள இந்துக்கள் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதால் இந்தியா பாகிஸ்தனை தனிமைப்படுத்த, இந்தியா பாகிஸ்தான் மீது வணிகப்போரை துவங்கிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இந்தியா சமீபத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்ததால் எல்லையில் பதற்றமான சூழல் இருந்து வருகிறது.
 
இந்நிலையில் பாகிஸ்தான் செய்தி மற்றும் கலாச்சார அமைச்சர், இந்தியாவில் உள்ள இந்துக்கள் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள். அவர்கள் மாய உலகில் வாழ்கிறார்கள் என பேசியுள்ளார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பி அவருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அமைச்சரின் இந்த கருத்திற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.