திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 டிசம்பர் 2017 (16:26 IST)

செல்போனுக்கு பதிலாக செக்ஸ் ; சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது

செல்போன் வாங்கி தருவதாக கூறி 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிங்கப்பூரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
சிங்கப்பூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தனக்கு செல்போன் வாங்க உதவும்படி சமூக வலைத்தளங்களில் உள்ள நண்பர்களிடம் உதவி கேட்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
 
அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஹரிகுமார் அன்பழகன் என்ற வாலிபர் அந்த பதிவை கண்டு அவருடன் நட்புடன் பழகினார். அதன்பின், கடந்த ஆண்டு மே மாதம் அந்த சிறுமியை நேரில் சந்தித்த அவர் நான் உனக்கு செல்போன் வாங்க 70 டாலர் பணம் தருகிறேன். ஆனால், நீ என்னுடைய ஆசைக்கு உடன்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கு சிறுமியும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருந்த அந்த வாலிபர், வேலை முடிந்ததும் பணத்தை கொடுக்காமல் ஓடி விட்டார்.
 
இதற்கிடையே அந்த சிறுமியின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள், அப்பெண்ணின் வைத்திருந்த மற்றொரு செல்போனில் உள்ள அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் ஹரிகுமாரின் விவகாரத்தை தெரிந்து கொண்டு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்படி, ஹரி குமாரை போலீசார் கைது செய்தனர். 
 
சிங்கப்பூர் சட்டப்படி, 18 வயது நிரம்பாத சிறுமியுடன் பாலியல் உறவு வைத்தால் 7 ஆண்டு வரை தண்டனை கொடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆனாலும், தற்போது அவருக்கு 18 மாதங்கள் தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.