ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 நவம்பர் 2017 (12:01 IST)

காதலனுடன் ஓடிப்போன பெண்ணுக்கு தண்டனை ; தந்தை, சகோதரர்கள் கூட்டாக கற்பழிப்பு

காதலனுடன் ஓடிப்போன பெண்ணை அவரின் சொந்த தந்தை மற்றும் சகோதர்களே கூட்டாக சேர்ந்து கற்பழித்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

உத்தரபிரதேச மாநிலத்தின் தனதே என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண், சில மாதங்களுக்கு முன்பு ஒருவரை காதலித்து  வீட்டை விட்டு அவருடன் சென்றுவிட்டார். அந்நிலையில், அப்பெண்ணை தேடிக்கண்டுபிடித்து வந்த குடும்பத்தினர், அவரை வீட்டில் அடைத்து வைத்தனர்.
 
மேலும், ஓடிப்போனதற்கு தண்டனையாக பெற்ற மகள் எனப் பார்க்காமல் தந்தை மற்றும் அவரின் சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 
 
இதைத்தொடர்ந்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.