1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (16:10 IST)

வீட்டிற்குள் வெள்ளம் ; ஜாலியாக மீன் பிடித்த நபர் - வைரல் வீடியோ

வீட்டிற்குள் வெள்ளம் ; ஜாலியாக மீன் பிடித்த நபர் - வைரல் வீடியோ
புயல் காரணமாக வீட்டிற்குள் புகுந்த நீரில் ஒரு நபர் மீன் பிடித்து விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
ஹார்வே என்ற புயல் சமீபத்தில் அமெரிக்காவை தாக்கியது. அதனால், டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன், விக்டோரியா உள்ளிட்ட சில நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்தது. இதனால், பல வீடுகளில் மழை நீர் புகுந்தது.
 
அந்நிலையில், ஹூஸ்டன் பகுதியில் விவியான சால்டன என்பவர் வசிக்கும் வீட்டினுள் வெள்ளம் புகுந்தது.  வெள்ள நீரோடு சில மீன்களும் வீட்டிற்குள் புகுந்துவிட்டன. அந்த மீன்களை விவியானாவின் தந்தை பிடித்து தனது மகளுடன் விளையாடினார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 
 
இவ்வளவு துயரமான சூழ்நிலையில், மீன் பிடித்து விளையாண்ட விவியானாவின் குடும்பத்தினரை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.