புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (22:37 IST)

நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் நம்பர் 2 இடத்தை பிடித்த 'விவேகம்'

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிக அதிகமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலும் நேற்று திரையிடப்பட்ட பிரிவியூ காட்சிகளின் வசூல் சாதனை படைத்துள்ளது.



 
 
அமெரிக்காவில் பிரிவியூ காட்சி வசூலில் இன்னும் முதலிடத்தை தக்க வைத்துள்ள படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி'. இந்த நிலையில் கபாலிக்கு அடுத்த இடத்தை விவேகம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
நேற்று ஒரே நாளில் விவேகம் படத்தின் அமெரிக்க பிரிமியர் காட்சியின் வசூல் $216,576 என்பது குறிப்பிடத்தக்கது