தொடர்புடைய செய்திகள்
- அந்த ஊசிய போட்டீங்கன்னா குரங்கா மாறிடுவீங்க! – எச்சரிக்கும் ரஷ்யா!
- அவசரம் காட்டும் ரஷ்யா; டெஸ்ட் ரிசல்ட் வராமலே தடுப்பூசி சக்சஸ்?
- மிஷன் ககன்யான் தாமதமாகலாம் - இஸ்ரோ சிவன் !!
- ஒலியை விட எட்டு மடங்கு வேகம்; துல்லியமான தாக்குதல்! – ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை!
- நான் ஓட்டாத காரை யாரும் ஓட்டக்கூடாது! பற்ற வைத்த மச்சான் மகன்!
2.5 கோடி ரூபாய் மதிப்பிலான காரைக் கொளுத்திய நபர் – அதிர்ச்சி வீடியோ!
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல யுடியுபர் ஒருவர் தனது புதிய மெர்சிடஸ் பென்ஸ் காரை எரித்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் லிட்வின் என்ற நபர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த சேனலுக்கு 49 லட்சம் பேர் சப்ஸ்க்ரைபர்களாக உள்ளனர். இதையடுத்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தனது புதிய மெர்சிடஸ் பென்ஸ் காரை கொளுத்தி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
மெர்சிடஸ் நிறுவனத்தில் இருந்து வாங்கிய காரில் சில கோளாறுகள் இருப்பதாக அவர் சர்வீஸுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களோ அதைக் கண்டுகொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். தனது எதிர்ப்பை தெரிவிக்க நினைத்த அவர், இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் ஏராளமான வியூஸை குவித்துள்ளது. ஆனால் சேனலை பிரபலப்படுத்தவே மிகைல் இதுபோல செய்ததாக சொல்லப்படுகிறது.
