நான் ஓட்டாத காரை யாரும் ஓட்டக்கூடாது! பற்ற வைத்த மச்சான் மகன்!

Car
Prasanth Karthick| Last Modified வியாழன், 1 அக்டோபர் 2020 (12:51 IST)
கோப்புப்படம்
சென்னையில் காரை ஓட்ட தராத ஆத்திரத்தில் காரை உறவினரே கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை பகுதியை சேர்ந்தவர் டோமினிக். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கார் ஒன்று புதிதாக வாங்கியுள்ளார். அப்போது அவர் வீட்டிற்கு வந்த அவரது டோமினிக் மனைவியின் தம்பி மகன் ஜர்விஸ் காரை ஓட்ட கேட்டுள்ளார். இதனால் ஜர்வீசுக்க்கும், டோமினிக் மகனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜர்வீஸ் காரில் கல்லை எறிந்துள்ளார்.

இந்நிலையில் பிரச்சினை முடிந்து சில காலம் ஆகிய நிலையில் டோமினிக் வீட்டு வழியாக நண்பர்களுடன் சென்ற ஜர்வீஸ் திடீரென காரை அடித்து நொறுக்கியதுடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டோமினிக் புகார் அளித்துள்ளார். காரை ஓட்ட தராததால் உறவினரே காரை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :