1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (21:48 IST)

10 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற மலாலா

malala
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த  நோபல் பரிசு பெற்ற மலாலா மீண்டும் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமியாக மலாலாவை தலீபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், உயிர் தப்பிய மலாலா, மேல்சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு உயர்கல்வி படித்துப் பட்டமும் பெற்று, உலகில் பெண்கல்விக்குக் குரல் கொடுத்தார்.இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு உலகில் மிக இளம் வயதில்  அமைதிக்கான  நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

கடந்த 2018 ஆண்டு பாகிஸ்தானுக்கு வந்த மலாலா, கொலை முயற்சி நடந்த 10 ஆண்டுகள் கழித்த நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கு நேற்று வந்தார் மலாலா.சமீபத்தில், கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார்.