1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (17:05 IST)

ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் |

Udhayakumar
ஒருநாள் மழை சென்னை தாங்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட வடமாநில குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் கலந்துகொண்டார் 
 
அப்போது அவர் பேசியபோது சென்னையில் மழை நீர் வடிகால் பாதாள சாக்கடை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை என்றும் அதனால் ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்க வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் மருத்துவ வசதியுடன் கூடிய நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆர் பி உதயகுமார் சென்னை மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை போன்ற வசதிகளை அமைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Edited by Siva