வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (18:36 IST)

சேலம் - கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் ரத்து: பயணிகள் அதிர்ச்சி!

train
கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கோவை திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் இதனை அடுத்து தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது
 
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் இந்த நேரத்தில் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் தீபாவளி வரை சேலம் பாசஞ்சர் ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran