வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (17:15 IST)

நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதி! – லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பஞ்சாப் வங்கியில் கடன் மோசடி செய்து வெளிநாடு தப்பிய தொழிலதிபர் நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி பண மோசடி செய்து விட்டு லண்டன் தப்பிய பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் பிடிப்பட்ட நிலையில் அவரை இந்தியா கொண்டு வர இந்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டது.

ஆனால் நீரவ் மோடி தரப்பில் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவது மனரீதியாக அவரை பாதிப்புக்கு உள்ளாக்கும் என்றும், இந்தியாவின் சிறை நிர்வாகம் குறித்த அவர் பதற்றத்தையும் முன்மொழிந்து லண்டன் நீதிமன்றத்தில் வாதாடியது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீர்வ மோடி தர்ப்பின் வாதங்களை நிராகரித்துள்ள நிலையில், நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த அனுமதியும் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்திய அரசு சார்பில் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.