செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (13:06 IST)

கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்குதல்.. சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர்..!

கால்பந்து போட்டியின் போது திடீரென மின்னல் தாக்கியதால் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த வீரர் சுருண்டு விழுந்த உயிரிழந்த சம்பவம் பெருநாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெரு நாட்டின் ஹுயாகயா மாகாணத்தில் உள்ள சில்கா மாவட்டத்தில் நடந்து கொண்டிருந்த ஒரு உள்ளூர் கால்பந்து போட்டியில், ஜுவென்டுட் பெல்லாவிஸ்டா மற்றும் ஃபேமிலியா சோக்கா ஆகிய அணிகள் போட்டியிட்டன. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக மின்னல் தாக்கியது.
 
மின்னல் தாக்கியதில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 39 வயது வீரர் ஜோஸ் ஹுகோ டி லா குரூஸ் மெசா திடீரென கீழே விழுந்தார். மின்னல் தாக்கியதும் அதிர்ச்சி அடைந்த வீரர்கள் தங்களின் ஆட்டத்தை நிறுத்தி, காயமடைந்த வீரர்களை நோக்கி விரைந்தனர்.
 
அப்போது, ஜோஸ் ஹுகோ டி லா குரூஸ் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சில வீரர்கள் மின்னலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மழை காலங்களில் கால்பந்து மைதானங்களில் மின்னல் தாக்கி வீரர்கள் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் அன்றாட நிகழ்வாகி வரும் நிலையில்  இனி மழை மற்றும் இடி மின்னல் நேரங்களில் கால்பந்து போட்டியை நடத்த வேண்டாம் என்று கால்பந்து போட்டியை நடத்தும் அமைப்புகளுக்கு பெரு அரசு கோரிக்கை விடுத்துள்ளது
 
 

Edited by Mahendran