திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2024 (07:03 IST)

தவெகவை அதிகம் விமர்சனம் செய்ய வேண்டாம்: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என்பது நேற்று பிறந்த குழந்தை; அதை அதிகம் விமர்சனம் செய்ய வேண்டாம்," என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று விஜய் நடத்திய தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இந்த மாநாடு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, தமிழக வெற்றிக்கழகம் குறித்து கூறிய போது, "கட்சி ஆரம்பிக்கும் போது கொள்கை, கோட்பாடு என பேசுவார்கள்; ஆனால் அதன் பிறகு வேறு திசையில் மாறிவிடுவார்கள். அப்படி திசை மாறாமல் வகுப்புவாத பாசிச சக்திகளுக்கு எதிராக உறுதியாக குரல் கொடுக்க வேண்டும். தமிழக வெற்றிக்கழகம் நேற்று பிறந்த குழந்தை, புதிய கட்சி, அதனால் அதிகம் விமர்சனம் செய்ய வேண்டாம்," என்று தெரிவித்தார்.

மேலும், "விஜய் எப்படி அரசியல் செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஒரு பிரபலமான நடிகர் கட்சி ஆரம்பித்தால், அது எதிர்நிலை வாக்குகளை எதிரணி அணிக்கு செல்ல விடாமல் மாற்றம் செய்ய பயன்படும்; திமுக எதிர்ப்பு ஓட்டுகள் விஜய்க்கு போகலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.

"ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது திமுக தான் முடிவு செய்யும்; ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் சேவை செய்வதே காங்கிரஸின் நோக்கம்," என்றும் அவர் கூறினார்.


Edited by 
Siva