ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2024 (10:54 IST)

கொடிமரம் மாற்றுவதில் வாக்குவாதம்.. மீண்டும் சிதம்பரம் தீட்சிதர்கள், அறநிலையத்துறை மோதல்?? - என்ன நடந்தது?

Chidambaram Dhikishisars

சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் அமைப்பது தொடர்பாக தீட்சிதர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

 

 

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் திருக்கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், முன்னதாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த தீட்சிதர்களுக்கும், அறநிலையத்துறைக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. முன்னதாக கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தீட்சிதர்கள் தடை விதித்ததும், அதை மறுத்து அறநிலையத்துறை அனுமதி அளித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் நடராஜர் கோவில் உள்ளே உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் புதிய கொடிமரம் அமைப்பது குறித்து அறநிலையத்துறை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு தீட்சிதர்கள் இடையே எதிர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று புதிய கொடிமரம் மாற்றுவது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
 

 

கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடி மரத்தை தற்போது உள்ளது போலவே புதிதாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் கொடி மரத்தில் புதியதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என தீட்சிதர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த களேபரத்தை தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K