வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (19:44 IST)

நடுக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு – 150க்கும் மேற்பட்டோர் பலி

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேற பயணித்த அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.

உலகம் முழுவதும் போர்களாலும், உள்நாட்டு கலவரங்களாலும் பல நாட்டு மக்கள் அகதியாக மாற்றப்பட்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட நாடுகளில் ஒன்று லிபியா. மெக்ஸிக்கோ மக்கள் சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவுக்குள் நுழைய முயல்வது போலவே லிபியா அகதிகளும் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய தேசங்களில் நுழைய முயல்கிறார்கள்.

இதை வருமானத்திற்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சிலர் அவர்களிடம் நிறைய பணம் பெற்றுக்கொண்டு படகு முழுக்க அதிக அளவு ஆட்களை ஏற்றி சென்று விபத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். இப்படி சமீபத்தில் லிபியாவில் இருந்து 300க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு மத்திய தரைக்கடலில் பயணித்த படகு ஒன்று நடுக்கடலில் மூழ்கியது. இதில் 150க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.