இலங்கையை தொடர்ந்து குவைத்திலும் பொருளாதார நெருக்கடி! – கூண்டோடு பதவி விலகல்!
குவைத்தில் பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது.
சமீப காலமாக பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளும், அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையும் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்நிலையில் தற்போது குவைத்திலும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலை தொடர்ந்து ஷேக் சபாவை மீண்டும் நாட்டின் பிரதமராக நியமித்தார் அரசர் ஷேக் நவாப் அல் அஹமத். ஆனால் நாடாளுமன்ற குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதில் அரசின் தலையீடு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரதமரிடம் கேள்வி எழுப்ப கோரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குவைத் அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளதால் அரசுக்கு பெரும் நெருக்கடி எழுந்துள்ளது. இதனால் கடன் பிரச்சினை காரணமாக அரசு சொத்துகள் விற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது பிரதமர் மற்றும் அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.