திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (08:38 IST)

திருடுபோன விஞ்ஞானி டார்வினின் நோட்டுகள்! – திரும்ப கொடுத்த மர்ம திருடன்!

Darwin Diaries
பிரபல விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் நோட்டுகளை திருடிய நபர் அதை திரும்ப கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த பெரும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உலகிற்கு சொன்னவர் விஞ்ஞானி சார்லஸ் டார்வின். அவர் கைப்பட எழுதிய இரண்டு நோட்டு புத்தகங்கள் அவர் படித்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. கடந்த 2000ம் ஆண்டு மர்ம ஆசாமி ஒருவரால் இந்த நோட்டு புத்தகங்கள் திருடப்பட்டது.

22 ஆண்டுகள் ஆகியும் திருடியவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடந்த ஆண்டு டார்வினின் நோட்டு புத்தகத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டி உலகளாவிய வேண்டுகோளை பலரும் முன்வைத்தனர். இந்நிலையில் டார்வினின் நோட்டு புத்தகங்களை கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக வாயிலில் போட்டு விட்டு சென்ற அந்த மர்ம நபர் ஈஸ்டர் வாழ்த்துகளையும் தெரிவித்து கடிதம் ஒன்றை வைத்துள்ளார். பல பவுண்ட் மதிப்புள்ள டார்வினின் நோட்டுகள் திரும்ப கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.