1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and Silver Price Update today in Chennai

ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை திடீரென சரிந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் எந்த நேரத்திலும் தங்கம் மீண்டும் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து  ரூபாய்   8,030 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 240 குறைந்து  ரூபாய்  64,240 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,760  எனவும் ஒரு சவரன் ரூபாய் 70,080 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 108.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  108,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
3வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. நஷ்டத்தில் இருந்து மீண்டெழும் முதலீட்டாளர்கள்..!