தமிழகத்தில் 2026ம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியுள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிறுவனரான ரங்கசாமி, புதுச்சேரியில் அதிமுக கூட்டணியுடன் தேர்தலில் நின்று வெற்றிப்பெற்று முதலமைச்சராக இருந்து வருகிறார். முதல்வர் ரங்கசாமிக்கும், நடிகர் விஜய்க்கும் நல்ல பழக்கம் உள்ள நிலையில் அவ்வப்போது சந்திப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டு விழாவில் பேசிய ரங்கசாமி, தமிழக தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்தி போட்டியிட தயாராகி வருவதாக கூறியிருந்தார். அவர் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறாரா? அல்லது தனது நண்பர் விஜய்யுடன் கூட்டணியா? என்ற கேள்விகளை இது ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் என்.ஆர் காங்கிரஸின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் எம்.ஆர்.காங்கிரஸில் இணையத் தொடங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் முதல்வர் ரெங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தனர்
இதுகுறித்து பேசியுள்ள முதல்வர் ரெங்கசாமி “நான் தமிழக பகுதிகளுக்கு செல்லும்போது அந்த பகுதி மக்களும், அரசியல் நண்பர்களும் தமிழ்நாட்டிலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வரவேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களுக்கும் பணியாற்ற வாய்ப்பு அளிக்கும் விதமாக 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பலரும் தற்போது என்.ஆர்.காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். புஸ்ஸி ஆனந்த மற்றும் விஜய் எனது நண்பர்கள். அதனால் அவ்வப்போது சந்திக்கின்றனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகள் பற்றி முடிவு செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K