செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (18:01 IST)

கொரோனா பீதியில் தற்கொலை செய்துகொண்ட நபர்! மருத்துவமனையில் பரபரப்பு !

மேகலாயாவில் கொரோனா அச்சத்தில் மருத்துவமனையில் இருந்த நோயாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 10,453 பேர் பாதிக்கப்பட்டு, 358 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 2,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கு அடுத்த இடத்தில் 1173 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவாமல் இருந்த நிலையில் இப்போது மேகாலயாவில் நேற்று ஒருவருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த நபர் பெதானி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் என்பது தெரியவந்ததால் அந்த மருத்துவமனைக்கு வந்து சென்றவர்கள் அரசிடம் தங்களை வெளிப்படுத்திக் கொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஷில்லாங் பெதானி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் அவர் கொரோனா பீதியால் இப்படி செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

26 வயது இளைஞரான அவர், தென்மேற்கு காசி ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.