1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Kazakhstan flight mess with a building

100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! – கட்டிடத்தில் மோதி சிதறி விபத்து!

World
கஜகஸ்தானில் விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தான் நாட்டு அல்மத்தி நகரிலிருந்து தலிநகர் நுர்சுல்தானுக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. 95 பயணிகள் மற்றும் 5 சிப்பந்திகளுடன் புறப்பட்ட விமானம் விமான நிலையம் அருகே இருந்த கட்டிடத்தில் மோதி சிதறியது. உடனடியாக அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட போதே போதிய உயரத்தை எட்ட முடியாமல் கட்டிடத்தில் மோதியிருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கஜகஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்! – தமிழகம் இரண்டாவது இடம்!