புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (16:08 IST)

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு; அமெரிக்காவில் பேரணி நடத்திய இந்தியர்கள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் அமெரிக்காவில் இந்திய வம்சாவளிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தியுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்கட்சியினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆங்காங்கே போலீஸாருடன் ஏற்பட்ட கைகலப்பில் வன்முறையும் வெடித்தது.

மேலும் அண்மையில் திமுக சார்பாக கூட்டணி கட்சிகளுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்காவின் சியாட்டில், ராலே, ஆஸ்டின் ஆகிய பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் கைகளில் பதாகைகளுடன் இந்திய மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தி குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி நடத்தினர்.