1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2022 (16:20 IST)

டிக்கெட் எடுத்தும் மகளிர்கள் பேருந்துகளில் பயணம் செய்யலாம்: அதிரடி அறிவிப்பு

woman ticket
அரசு பேருந்துகளில் ஓசி பயணம் செய்ய விரும்பாதவர்கள் டிக்கெட் எடுத்து பயணம் செய்ய விரும்பினால் அவர்கள் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம் என்றும் டிக்கெட் கேட்கும் மகளிர்களுக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று வாய்மொழியாக நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
சமீபத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழா ஒன்றில் பேசிய போது பெண்கள் ஓசியில் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது 
 
இதனை அடுத்து பல பெண்கள் தாங்கள் டிக்கெட் எடுத்து தான் பயணம் செய்வோம் எங்களுக்கு ஓசிப்பயணம் தேவையில்லை என்று நடத்துனரிடம் சண்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பேருந்துகளில் மகளிர் டிக்கெட் எடுக்க விரும்பினால் அவர்களுக்கு டிக்கெட் வழங்க அனைத்து பேருந்து நடத்துனர்களுக்கும் வாய்மொழியாக போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva