1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2022 (14:40 IST)

ஆயுத பூஜை –விஜய தசமி வாழ்த்துகள் கூறிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில்  நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில், அமமுக பொதுச்செயலர் தினகரன், செய்யும் தொழிலைப் போற்றி வணங்கும் ஆயுத பூஜையையும், வெற்றித்திருநாளான விஜயதசமியையும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத்  தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,.

ஆயுத பூஜை - விஜயதசமி வாழ்த்துகள்!

செய்யும் தொழிலைப் போற்றி வணங்கும் ஆயுத பூஜையையும், வெற்றித் திருநாளான விஜயதசமியையும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 


இந்த நன்னாளில் அவரவருக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ள அனைவரின் தொழிலும் வாழ்வும் சிறந்திட வேண்டுமென மனப்பூர்வமாக இறையருளை வேண்டுவோம், நேர்மறை சிந்தனைகளை மனதில் இருத்தி, புதிய சாதனைகள் புரிவதற்கான பணிகளை வெற்றித்திருநாளான விஜயநாமியில் தொடங்கிடுவோம். உழைப்பவருக்கும், உழைப்பவரை உயர்த்த நினைப்போருக்கும் நாளிலத்தில் எப்போதும் தனி மதிப்புண்டு என்பதைச் செயலில் காட்டுவோம்.

விஜயதசமி நாளில் அனைவருக்கும் நலமும் வளமும் நிறைந்திட அன்னை பராசக்தியைப் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj