திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 மே 2021 (16:59 IST)

தைவானை நாடு என அழைத்ததால் ஜான் சீனாவுக்கு வந்த சிக்கல்!

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ஜான் சீனா தைவானை தனிநாடு எனக் கூறியிருந்தார்.

இது சம்மந்தமான ஒரு பேட்டியில் சீனா, பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 9 ஆம் பாகத்தை முதல் முதலில் பார்க்க இருக்கும் நாடுகளில் தைவானும் ஒன்றாக இருக்கும் எனக் கூறியிருந்தார். சிறு தீவான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா நீண்டகாலமாக கூறி வருகிறது. இந்நிலையில் சீனாவின் இந்த கருத்து அந்த மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த அவருக்கெதிராகக் கண்டனங்களை எழுப்பினர்.

இதையடுத்து விளக்கமளித்த ஜான் சீனா ‘என் பேச்சில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்’ எனக் கூறியுள்ளார். ஆனால் சீனா தைவானை தனி நாடு என சொன்னது சரியானது என்றே ஒரு சிலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.