செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 மே 2021 (16:09 IST)

நிதிஷ் வீரா குடும்பத்துக்கு உதவும் இருவர்… ஆறுதலான செய்தி!

கொரோனா பாதிப்பால் இறந்த நிதிஷ் வீரா குடும்பத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் உதவ முடிவெடுத்துள்ளாராம்.

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவருக்கு சினிமாவில் முதல் முதலாக அடையாளம் தந்தது புதுப்பேட்டையில் அவர் நடித்த மணி கதாபாத்திரம்தான். அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் மீண்டும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது என்றால் அது அசுரன் படம்தான்.

அந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவருக்கு அதிகளவில் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக நண்பர்களிடம் கூறி மகிழ்ச்சியும் அடைந்துள்ளார். ஆனால் அதற்குள்ளாகவே அவர் கொரோனாவால் இறந்துவிட்டதால் அவரது குடும்பம் பொருளாதார சிக்கலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகிய இருவரும் நிதீஷின் குடும்பத்துக்கு உதவும் வகையில் அவரின் இரண்டு மகள்களின் வங்கிக் கணக்கிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்து அவர்களின் கல்வி செலவுக்கு உதவ உள்ளார்களாம்.