கேலிக்கு உள்ளான லாஸ்லியாவின் புகைப்படம்… என்னடா இப்படி எல்லாம் கேக்குறிங்க!
நடிகை லாஸ்லியா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் கேலிக்கு ஆளாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் லாஸ்லியா அனைவரையும் கவர்ந்தார் என்பதும் அவருக்கு தான் முதன்முதலில் கடந்த சீசனில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் பிரபலமானதை அடுத்து லாஸ்லியா கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியா சமூகவலைதளங்களின் மூலம் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.
இதையடுத்து இப்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ரசிகர்கள் எல்லை மீறி கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் மீசையை ஒழுங்கா ஷேவ் செய்யவில்லையா? என்றும் மீசை வளருது போல என்றும் கமெண்ட் செய்துள்ளார்.