1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:41 IST)

மக்களுக்கு ஒரு சட்டம்.. உங்களுக்கு ஒன்னா? – ஜப்பான் அமைச்சரை பதவி நீக்கிய பிரதமர்!

ஜப்பானில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளை மீறிய அமைச்சரை அந்நாட்டு பிரதமர் பதவி நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது வீரியமிக்க கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கை மேலும் கடுமையாக்கி வருகின்றன. இந்நிலையில் ஜப்பானிலும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனால் ஊரடங்கு விதிமுறைகளை சட்டை செய்யாத அமைச்சர் டெய்டோ டானோஸெ அவசர நிலை அறிவிப்புகளை மதியாமல் இரவு விடுதிக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு சட்டமெல்லாம் மக்களுக்கு மட்டும்தானா என பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கிய நிலையில் அமைச்சர் டெய்டோவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா.