வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:14 IST)

எஸ் பி பி குடும்பத்தினரை சந்தித்த எல் முருகன்.. குஷ்பு போட்ட டிவீட்!

நடிகை குஷ்பு மற்றும் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் ஆகியோர் எஸ் பி பி குடும்பத்தினரை நேரில் சென்று மரியாதை செலுத்தியுள்ளனர்.

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்துக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபுஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் மற்றும் நடிகையும் பாஜகவில் தற்போது இணைந்துள்ளவருமான எல் முருகன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக எஸ்பிபி யின் மனைவி சாவித்ரி மற்றும் எஸ் பி சரண் ஆகியோரை நேரில் சென்று சந்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்களை நடிகை குஷ்பு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.