சராசரியில் 100க்கும் கீழ் குறைந்த இறப்பு எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா!
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,635 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,07,66,245 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,54,486 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,04,48,406 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,63,353 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.