திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜனவரி 2020 (16:43 IST)

என்னை காதலிச்சா நிலாவுக்கு டூர் போகலாம்! – கோடீஸ்வரர் வழங்கும் ஆஃபர்

ஜப்பானின் மிகப்பெரும் கோடீஸ்வரர் ஒருவர் தன்னை காதலிக்கும் பெண்ணை நிலவுக்கு அழைத்து செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.

ஜப்பானில் உள்ள மிகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவர் யுசாகு மேசாவா. சோசோடவுன் என்ற ஆன்லைன் விற்பனை தளத்தின் நிறுவனரான இவருக்கு ஜப்பானில் பல்வேறு தொழில்களும் உள்ளன. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் யுசாகு மேசாவாவும் செல்ல உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய மேசாவா ”எனக்கு 44 வயது ஆகிறது. தனிமை, வெறுப்பு ஆகிய உணர்வுகள் என்மீது வர தொடங்கியுள்ளது. நான் ஒரு வாழ்க்கை துணையை விரும்புகிறேன். என்னுடைய காதலியோடு வானத்திலிருந்து அமைதியான உலகை பார்க்க விரும்புகிறேன். என்னை காதலிக்கும் பெண்ணை நான் நிலவுக்கு கூட்டி செல்வேன்” என கூறியுள்ளார்.

மேசாவாவின் இந்த அறிவிப்புக்கு பிறகு ஏராளமான பெண்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை தொடர்ந்து மேசாவாவுக்கு அனுப்பி வருகிறார்களாம்.