புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By VM
Last Modified: புதன், 13 பிப்ரவரி 2019 (08:42 IST)

நாயை கட்டி போட்டால் 6 மாதம் சிறை

வங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச் சட்டத்தை' அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டத்தை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது. 


‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என அழைக்கப்படும் இச்சட்டத்தின் படி,  சரியான காரணங்கள் இன்றி ஒரு நாள் அல்லது அதற்கு மேல் நாயை கட்டிப்போடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும். அதேசமயம் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லுவது மற்றும் மத சடங்குகளுக்காக விலங்குகளை பலி கொடுப்பது போன்றவை குற்றமில்லை.  
 
இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.