வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (12:09 IST)

காணாமல் போன நாய்: துடிதுடித்து போன ஓனர்: என்ன செய்தார் தெரியுமா?

கோவையில் நபர் ஒருவர் காணாமல் போன தனது நாயை தேடி ஊர் முழுக்கவும் பேனர்கள் வைத்துள்ளார்.
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் தீபக்(45). இவர் பிசினஸ் செய்து வருகிறார். தீபக் ராய் என்ற நாயை செல்லமாக வளர்த்து வந்தார். அந்த நாய் என்றால் தீபக்கிற்கு அவ்வளவு பாசம். வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்தால், எந்நேரமும் நாயிடமே பொழுதை கழிப்பார்.
 
இந்நிலையில் சமீபத்தில் அந்த நாய் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு பகுதிகளில் தனது நாயை தேடினார். ஆனால் நாய் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை, தனது நாய் காணாமல் போய்விட்டதாகவும் அதனை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என நாயின் போட்டோவுடன் பேனர் அடித்து ஊர் முழுக்க ஒட்டியுள்ளார்.
 
அத்தோடு நிறுத்தாமல், ஒரு மினிடோர் வண்டியில் அந்த பேனரை வைத்து, ஊர் முழுக்க சுற்றி வருகிறார். அவரின் நாய் விரைவில் கிடைக்க பிராத்திப்போம். நாய் மீதான இவரின் பாசம் பலரை வியப்படைய வைத்துள்ளது.