வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (13:00 IST)

பாலியல் வன்கொடுமை: ஹீரோவாக மாறி இளம்பெண்ணை காப்பாற்றிய நாய்!!

மத்தியபிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமையிலிருந்து நாய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்தியபிரதேச மாநிலம் சோலா பகுதியை சேர்ந்தவர் ஷோ. ஷோ தனது கணவருடன் வசித்து வந்தார். ஷோவின் கணவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஷோவிற்கு நாய்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் வசிக்கும் அதே தெருவியில் உள்ள நாய் ஒன்றிற்கு சாப்பாடு போட்டு கவனித்து வந்துள்ளார். அந்த நாயும் ஷோவிற்கு விஸ்வாசமாக இருந்துள்ளது.
 
இந்நிலையில் நேற்று ஷோவின் கணவர் வேலைக்கு சென்ற பின்னர், அவரது வீட்டிற்குள் புகுந்த பக்கத்து வீட்டுக்காரனான சுனில் என்பவன் ஷோவை கற்பழிக்க முயன்றான். ஷோ பயத்தில் கத்தவே, சம்பவ இடத்திற்கு ஓடி வந்த நாய் அந்த நபரை தாக்கியது. அப்போது சுனில் தான் வைத்திருந்த கத்தியால் நாயை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த நாய் விடாமல் சுனிலை தாக்கியது.
 
இறுதியில் நாயின் தாக்குதலை சமாளிக்க முடியாத சுனில் அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதுகுறித்து உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சுனிலை தேடி வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த நாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது. நாயின் விஸ்வாசத்தை பார்த்து நெகிழ்ந்துபோன அப்பகுதி மக்கள் விரைவில் நாய் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.