1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (15:00 IST)

கடைக்காரர்களை மிரட்டி ஏழைகளுக்கு உதவும் மாஃபியா கும்பல் – இத்தாலியில் பரபரப்பு!

இத்தாலியில் கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காமல் வாடும் ஏழை மக்களுக்கு அந்த பகுதி மாஃபியா குழுக்கள் உதவுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பல நாடுகளில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் ஏழை மக்கள் அன்றான உணவுக்கு அல்லாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இத்தாலியில் நேப்பிள்ஸ் மற்றும் பலெர்மோ பகுதிகளில் உள்ள அன்றாட வேலை பார்க்கும் ஏழை மக்கள் ஊரடங்கால் பெரிதும் உணவுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இத்தாலியில் உள்ள மாஃபியா குழுக்கள் சில அங்குள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றன. ஆனால் அந்த மாஃபியா கும்பல்கள் அதை விலை கொடுத்து வாங்குவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள கடைக்காரர்களை மிரட்டி அவர்களிடமிருந்து பொருட்களை பெற்று மக்களுக்கு அளிப்பதாக பலர் புகார் கூறியுள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளில் மூழ்கியுள்ள இத்தாலி அரசு இந்த மாஃபியா கும்பல் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.