விவசாயம், வணிகம் அனுமதிக்கப்படுமா? – விரிவான அறிக்கை நாளை!

தொடங்கியது மக்கள் சுய ஊரடங்கு
Prasanth Karthick| Last Updated: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (11:29 IST)
இரண்டாம் கட்டமாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய அரசாணைகள் குறித்து நாளை அரசு அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் செயல்படுத்த உத்தரவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இன்றுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடியும் நிலையில் நாட்டு மக்களோடு உரையாடியுள்ளார்.

அதில் பேசிய அவர் நாட்டு மக்கள் ஒன்றாக இணைந்து ராணுவ ஒழுங்கோடு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக கூறினார். மேலும் முதற்கட்டமாக ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில், இரண்டாவது கட்டமாக 19 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் ஏப்ரல் 20க்கு பிறகு கொரோனா ஆபத்து பகுதிகளை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஊரடங்கு குறித்த அரசின் விதிமுறைகள் நாளை வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. அதில் கட்டுப்பாட்டு தளர்வுகள் மற்றும் புதிய விதிமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :