புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (14:50 IST)

கிருமி நாசினி தெளிக்க தயங்கிய தூய்மை பணியாளர்கள் - களத்தில் இறங்கிய நடிகை!

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு மேலும் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இன்று இந்திய பிரதமர் மோடி வருகிற மே 3 வரை ஊரடங்கு நீடிப்பை அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் பெரும் பங்காற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம்  நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜா தனது தொகுதியில் கொரோனா தடுப்பு பணி நடவடிக்கை பணியான கிருமி நாசினி தெளித்துள்ளார்.

நகரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடமாலை பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டது. இதனால் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க தூய்மை பணியாளர்கள் தயக்கம் காட்டியுள்ளனர். இதையடுத்து நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா களத்தில் இறங்கி வேலை பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அவருடன் இருந்த மற்ற உதவியாளர்கள் யாரும் பாதுகாப்பு உபகாரணங்களான மாஸ், உடை உள்ளிட்ட எதையும் அணியாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.