ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2024 (15:27 IST)

தென்கொரியாவில் பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா..! சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் பாதிப்பு.!!

Docotrs Protest
தென்கொரியாவில் ஒரே சமயத்தில் 6400 பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 
தென் கொரியாவில் மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் மருத்துவர்கள் உள்ளனர். தென் கொரியா முழுவதும் 100 மருத்துவமனைகளில் 13,000 பயிற்சி மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளின் போது மூத்த மருத்துவர்களுக்கு துணையாக செயல்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் மருத்துவ கல்லூரிகளில் ஆண்டு ஒன்றுக்கு மாணவர் சேர்க்கையை 3 ஆயிரத்திலிருந்து 5000 ஆக உயர்த்த தென்கொரியா அரசு முடிவு எடுத்துள்ளது.
 
மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் வருங்காலத்தில் ஊதியம் குறைக்கப்படலாம் என கருதி தென்கொரியாவில் 6400 பயிற்சி மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்துள்ளனர். 

 
மாணவர் சேர்க்கையை உயர்த்தும் அரசின் முடிவை உடனடியாக கைவிட கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை உள்ளிட்ட முக்கிய மருத்துவ சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்