தமிழ்நாடு குப்பை கிடங்கு அல்ல.. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசு வாதம்..!
ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் தமிழ்நாடு ஒன்றும் குப்பை கிடங்கு அல்ல என தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் வாதிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை மாசு ஏற்படுத்தும் காரணமாக தடை செய்யப்பட்டது என்பதும் இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக அந்த ஆலை மூடப்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்று வருகிறது.
இன்றைய விசாரணையின் போது தமிழ்நாடு ஒன்றும் குப்பை கிடங்கு அல்ல என்றும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தூத்துக்குடி பொருத்தமான இடம் இல்லை என்றும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆலையை இயக்க அனுமதித்தால் மீட்க முடியாத சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவேதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலைக்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்துள்ளது என்றும் வழக்கறிஞர் வாதாடினார். மேலும் ஆலையை திறக்க அனுமதித்தால் அது உள்நாட்டு உற்பத்தியை பூர்த்தி செய்யாமல் ஏற்றுமதிக்கு வழிவகுக்கும் என்றும் மாசுவை ஏற்படுத்தும் தொழிற்சாலை எங்களுக்கு தேவையில்லை என்றும் கூறப்பட்டது
Edited by Mahendran