1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (10:41 IST)

3 ஆம் அலை... ஊரடங்குக்கு தயாராகும் இத்தாலி!

இத்தாலியில் மூன்றாம் கட்டக்கொரோனா அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 7.37 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில், பண்டிகை நாட்கள் வர உள்ளதால் இத்தாலியில் மூன்றாம் கட்டக் கரோனா அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதனைத் தவிர்ப்பதற்காக கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அலை ஏற்பட்டுவிட்டால் அது மிகப் பெரிய அழிவைத் தரும். அதனைத் தடுக்க வேண்டும் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.