செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (08:45 IST)

கொரோனா தடுப்பூசி; வட்டார மையங்கள் அமைக்க உத்தரவு! – செயலில் இறங்கும் மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்க உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரசால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் மூன்று விதமான கொரோனா தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் கூடிய விரைவில் அவற்றை மக்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நிபந்தனைகள் முன்பதிவு முறை குறித்து முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த மத்திய அரசு தற்போது மாநில அரசுகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த வட்டார அளவிலான தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வட்டாரங்களுக்கான தடுப்பூசிகளை சேமித்து வைக்கவும், பாதுகாக்கவும் மையங்கள் அமைக்கவும், அவற்றின் தரத்தை சோதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது