1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2023 (07:41 IST)

தரை, வான், கடல் என மும்முனைத் தாக்குதல்.! பாலஸ்தீனத்தில் பதட்டநிலை..!

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேல் தற்போது அதிரடி தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இதுவரை வான்வழி தாக்குதலை மட்டும் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது தரைவழி மற்றும் கடல் வழி தாக்குதலையும் ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது 
 
 அமெரிக்கா மற்றும் ஐநா சபை உள்ளிட்டவற்றின் கோரிக்கைகளை மீறி காசா மீது இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் காரணமாக  பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரையோரம் முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது 
 
ஏற்கனவே வான், கடல் வழியாக அதிரடி தாக்குதல் நடத்திவரும் நிலையில் தற்போது  தரைவழி தாக்குதலால் பாலஸ்தீனம் நாட்டில் பதட்டம் அதிகரித்து உள்ளது.
 
Edited by Siva