வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் குழுவின் மூத்த அதிகாரி பலி
கடந்த சனிக்கிழமை ( அக்டோபர் 7) பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதியான காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறது.
இருதரப்பினர் இடையே தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். மக்கள், உணவு, இருப்பிடம், நீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாகவும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
8 வது நாளாக நடைபெற்று வரும் போரில் காசாவில் ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் குழுவின் மூத்த அதிகாரி உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், ஹமாஸ் குழுவின் தலைமையகம் மற்றும் கமாண்டோ படைகளுக்குச் சொந்தமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஹமாஸின் மூத்த தலைவர் முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படையினர் கூறியுள்ளனர்.