1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (09:41 IST)

சுரங்க பாதைகளில் ஹமாஸ் பதுங்கல்.. உள்ளே நுழையும் இஸ்ரேல்! – காசா மக்களுக்கு எச்சரிக்கை!

israel -Palestine
இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் இடையேயான போர் முற்றியுள்ள நிலையில் வடக்கு காசாவில் தாக்குதல் நடத்த உள்ளது இஸ்ரேல்.



இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் போர் உச்சம் தொட்டுள்ளது. நாளுக்கு நாள் இஸ்ரேல் – காசா எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்து வரும் நிலையில் ஏராளமான மக்கள் பலியாகி வருகின்றனர். இதுவரை ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1300 பேரும், பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1900 பேரும் என மொத்தம் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

8வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில் வடக்கு காசாவில் உள்ள சுரங்க பாதைகளில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறும் இஸ்ரேல் அங்கு தாக்குதல் நடத்த உள்ளதாகவும், அதனால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறுமாறும் உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர்.

Edit by Prasanth.K