1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2023 (07:46 IST)

ஹமாஸ் முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் சபதம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் சபதம் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், காசா மீது தரைவழி தாக்குதலையும் நடக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக எல்லை பகுதியில் 3 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராக இருப்பதாகவும்  முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்

ஹமாஸ் அமைப்பினர்கள் உயிரற்ற மனிதர்கள் எனக் கூறிய பெஞ்சமின்  சிறுவர் சிறுமிகளை பின்னால் கைகட்டி தலையில் சுடுவது, உயிருடன் மக்களை எரிப்பது, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது ஆகிய அட்டூழியங்களை செய்து வருவதாகவும் குற்றம் காட்டினார்

Edited by Siva